Thursday, September 11, 2025
Homeஇந்தியாட்ரம்புக்கு இந்தியா மீது ‘தீடீர்’ பாசம்.. மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதாக அறிவிப்பு…

ட்ரம்புக்கு இந்தியா மீது ‘தீடீர்’ பாசம்.. மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதாக அறிவிப்பு…

கடும் வரிவிதிப்பிற்கு பிறகு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், இந்தியாவும் அதனை எதிர்நோக்கி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு கடுமையான விதிகளை விதித்து வருகிறார். அதன்படி ஜூலை 30 அன்று, இந்தியா எங்கள் நட்பு நாடாக இருந்தாலும், 25% வரி விதிக்கப்படும் என அறிவித்தார் டிரம்ப். இந்தநிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை இந்தியா ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டி, இந்திய பொருட்கள் மீது 25% வரி விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

பின்னர், ஆகஸ்ட் 27ஆம் தேதி இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பை மேலும் 25% உயர்த்தியுள்ளதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்தியா மீதான அமெரிக்காவின் வர்த்தகப் போரால் ஜவுளித்துறை, தேயிலை, வைரம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும், இந்த அதிக வரிவிதிப்பால் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆடைகள் திருப்பூரில் முடங்கி கிடக்கின்றன. திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுடன் வர்த்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் அமெரிக்க ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள ட்ரம்ப், “இந்தியாவும், அமெரிக்காவும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க, தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் வாரங்களில் எனது சிறந்த நண்பர் பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன். இரு பெரிய நாடுகளும் வெற்றிகரமான முடிவுக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்!” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இயற்கையான கூட்டாளிகள். எங்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகள் இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையின் வரம்பற்ற திறனைத் திறக்க வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

இந்த விவாதங்களை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஜனாதிபதி டிரம்புடன் பேசவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் இரு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பெற நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments