ஆன்லைனில் மோசடி வெப்சைட்டுகள் மற்றும் லிங்குகளை கண்டறிந்து முடக்கும் நடவடிக்கையில் தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 510 மோசடி லிங்க் மற்றும் வெப்சைட்டுகளை முடக்கி இருப்பதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
பொதுமக்களின் ஆசையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்கள் மூலமாக மோசடியாக லிங்கை அனுப்பி, அதனை தொட்டால் முழுவதுமாக கையகப்படுத்தி வங்கியில் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
குறிப்பாக புது, புது வகைகளில் லிங்கை அனுப்பி சைபர் கிரைம் கும்பல் மோசடியை அரங்கேற்றி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை போலீசார் கண்காணித்து முடக்கி வருகின்றனர்.
கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 510 மோசடி லிங்குகள் மற்றும் வெப்சைட்டுகளை முடக்கி இருப்பதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதில் இன்ஸ்டாகிராமில் தான் அதிகப்படியான மோசடி லிங்குகளை முடக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 169 லிங்குகளையும், ஜூன் மாதம் 177 மோசடி லிங்குகளையும் மற்றும் ஜூலை மாதம் 164 மோசடி லிங்குகளையும் தமிழக சைபர் கிரைம் போலீசார்.முடக்கி உள்ளதாக தெரிவித்தனர்.