Friday, September 12, 2025
Homeசினிமாஇந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் திரைப்படங்கள் - மிஸ் பண்ணாதீங்க!

இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் திரைப்படங்கள் – மிஸ் பண்ணாதீங்க!

இந்த வாரம் ஓடிடியில் எந்த படங்கள் எல்லாம் வெளியாகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் ஜாக்பாட் அடிக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினி  நடித்த கூலி படம் முதல் ஜப்பான், ஸ்பானிஷ் உள்ளிட்ட வெப் சீரிஸ்களும் வெளியாக உள்ளன.

இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் திரைப்படங்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ’கூலி’ திரைப்படம். ரஜினியுடன் நாகர்ஜுனா, சத்யராஜ், செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, அமீர்கான் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்த கூலி திரைப்படம், ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீசானது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

இதேபோல் ஹாரர் ஜானரில் எடுக்கப்பட்ட ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்திலும், வேம்பு திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளன. அதேபோல், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்த Phoenix திரைப்படம்  டென்கொட்டா ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இந்தியில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த சயாரா (Saiyaraa) இந்த வாரம் முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

கன்னடத்தில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற Su from So திரைப்படமும் இந்த வாரம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் பாகாசூரா ரெஸ்டாரண்ட் (Bakasura Restaurant) திரைப்படம் அமேசான் ப்ரைமிலும், Rambo In Love என்ற வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும், மலையாளத்தில் கதிர், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் நடித்த மீஸா (Meesha) திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் மூவி ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் Heart Eyes, Weekend In Taipei, When Fallis Coming, Monster Summer, Larry The Cable Guy ஆகிய படங்களை இந்த வாரம் ஓடிடியில் கலக்க உள்ளன.  நெட்பிளிக்ஸ் தளத்தில் Materialists, The Wrong Paris ஆகிய ஆங்கில திரைப்படங்கள் இந்த வாரம் ரிலீஸாகியுள்ளன. அதேபோல், Aka Charlie Sheen என்ற டாக்குமெண்ட்ரி திரைப்படமும் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. மேலும், Kiss Or Die என்ற ஜப்பான் மொழி வெப் சீரிஸ், The Dead Girls என்ற ஸ்பானிஷ் வெப் சீரிஸ், Ratu Ratu Queens என்ற இந்தோனேஷிய மொழி சீரிஸ், Her Mothers Killer என்ற ஸ்பானிஷ் சீரிஸின் இரண்டாவது சீசன், You And Everything Else என்ற கொரியன் சீரிஸ் ஆகியவை ஸ்ட்ரீமிங் ஆகின்றன. Do You Wanna Partner என்ற இந்தி வெப் சீரிஸும், The Girl Friend என்ற வெப் சீரிஸின் முதல் சீசனும், Every Minute Count என்ற ஸ்பானிஷ் வெப் சீரிஸின் இரண்டாவது சீசனும் இந்த வாரம் அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments