அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து இந்திய பொருட்களுக்கான இன்று முதல் கூடுதல் 25% வரி அமலுக்கு வருகிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு கடுமையான விதிகளை விதித்து வருகிறார். அதன்படி ஜூலை 30 அன்று, இந்தியா எங்கள் நட்பு நாடாக இருந்தாலும், 25% வரி விதிக்கப்படும் என அறிவித்தார் டிரம்ப். இந்தநிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை இந்தியா ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டி, இந்திய பொருட்கள் மீது 25% வரி விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பை மேலும் 25% உயர்த்தியுள்ளதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடடுள்ளது. மொத்தமாக 50% வரிவிதிப்பு இன்றுமுதல் (ஆகஸ்ட் 27) அமலுக்கு வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியா மீதான அமெரிக்காவின் வர்த்தகப் போரால் ஜவுளித்துறை, தேயிலை, வைரம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பால் விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் தற்போது ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆடைகள் திருப்பூரில் முடங்கி கிடக்கின்றன. திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.