வேளாங்கண்ணி பாதயாத்திரை பக்தர்களுக்கு சார்லஸ் குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும் சமூக சேவகருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் சார்பில் அன்னதானம் வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில், ஆகஸ்ட் 29 அன்று நடைபெறவுள்ள மாதா கோவில் கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி வழியாக பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் நலன் கருதி, சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஏற்பாட்டில், கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி 28ஆம் தேதி வரை, ஏழு நாட்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 26) காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி பகுதியில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, சுமார் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் ஜோஸ் சார்லஸ் மார்டின்.

இந்நிகழ்வில், சகாய மாதா தேவாலயத்தின் அருட்தந்தை ஆரோக்கிய ஜான் ராபர்டும், பொதுமக்களும் பங்கேற்று, பாதயாத்திரை செல்லும் பக்கதர்களுக்கு இலவச மருத்துவ சேவையும், உணவும் வழங்கிடும் ஜோஸ் சார்லஸ் மார்டினின் சேவையை பாராட்டினார்.