பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள LIK படத்தின் ‘First punch’ இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
விக்னேஷ் சிவன் LIK (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) எனும் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் முதல் பாடலான “தீமா தீமா..” அனிருத் பிறந்த நாளில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் ‘First punch’ இன்று 11.11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிரதாப் ரங்கநாதன் நடிப்பில் இதற்கு முன்னதாக வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இந்த படம் டைம் டிராவல் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.