புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சாமி தரிசனம் செய்தார்.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு மணக்குள விநாயகர் கோயிலில் இன்று காலை சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சாமி தரிசனம் செய்தார். விடியற்காலையில் கோயிலுக்கு வருகை தந்த அவருக்கு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, பரிவட்டம் கட்டி சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அவரது ஏற்பாட்டில் பிரசாதம் வழங்கினார்.
ஜோஸ் சார்லஸ் மார்டினின் பதிவு
தனது சமூக வலைத்தளங்களில் இது குறித்து பதிவிட்ட ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், “விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று புதுச்சேரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தேன். முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதார திருநாளில் அவரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி மகிழ்ந்தேன். புதுச்சேரி மக்களின் வாழ்வில் வளம் பெருகி, மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என இந்நாளில் வேண்டிக்கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார். மேலும், “விநாயகர் சதுர்த்தியை உற்சாகத்துடன் கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்,” என வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.