மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி உள்ளது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று கூறியதுடன், தமிழ்நாட்டில் பெண்கள் யாருக்கும் பாதுகாப்பில்லை, சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அத்துடன் அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடம் சரிதானே என்று கேள்வி எழுப்பிய விஜய், அந்த சத்தம் கேட்கிறதா? என்றும் அதிர வைத்தார். அவரது பேச்சுக்கு தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதுகுறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,” நான் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு நிறைய முறை சென்று இருக்கிறேன். நானே வணக்கம் அங்கிள்.. வணக்கம் ஆண்ட்டி.. எப்படி இருக்கீங்க என்று தான் சொல்வேன். அங்கிள் என்பது தவறான வார்த்தை கிடையாது. விஜய் பேசியது எனக்கு தவறாக படவில்லை” என்றார்.