புதுச்சேரி.. ஆஹா.. இந்த பேரைக் கேட்டதும் என்ன ஞாபகத்துக்கு வரும். அழகான பீச், வீக் எண்ட் பார்ட்டி பண்ண தோதான இடம்.. அழகான மஞ்சள் நிற கட்டிடங்கள், நீண்ட சாலைகள், பிரெஞ்சு மொழி.. அப்படித்தானே. இதெல்லாம் வெளியில் இருந்து பாக்குறவங்க சொல்ற விஷயங்கள்.

இதையே இதே ஊர்ல வாழ்ற ஒரு புதுச்சேரிவாசி கிட்ட போய் கேட்டுப் பாருங்க. புதுச்சேரினு சொன்னதும் என்ன ஞாபகத்துக்கு வருதுனு. பெரிய லிஸ்ட்டே அவன்கிட்ட இருக்கும். என்ன தெரியுமா?.. குடிக்க சரியா தண்ணி இல்லீங்க, ரோட்ல கால வைக்க முடியல அவ்ளோ ட்ராபிக், கொஞ்ச மழை பெஞ்சாலே தெருமுழுக்க தேங்குற வெள்ளம், போதாக்குறைக்கு வீட்டுக்குள்ளேயே புகுந்துடும் மழைநீர், சரியான வேலைவாய்ப்பு இல்ல, தனிமாநில அந்தஸ்து இன்னும் கிடைக்கலனு சொல்லிக்கிட்டே போவாங்க..

இதுதான் உண்மையான புதுச்சேரி..
சரி இதை யாராச்சும் சரி பண்ணிட மாட்டாங்களா, நம்ம வாழ்க்கை மாறிடதானு கடந்த 50 வருஷமா ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் புதுச்சேரி மக்கள் வாய்ப்பு கொடுத்துட்டே தான் வந்தாங்க. மியூசிக்கல் சேர் மாதிரி முதலமைச்சர் சீட் ல கட்சி தான் மாறுச்சே தவிர காட்சிகள் மாறல. அதே பிரச்னைகள்.. இந்த கட்சி அந்த கட்சியை குறை சொல்ல, அந்த கட்சி இந்த கட்சியை குறை சொல்ல அரசியல்வாதிகள் விரல்நீட்டி விளையாடுனாங்களே தவிர, புதுச்சேரி மக்களோட தலையெழுத்தை யாரும் சரியா எழுதல.
ஆயிரத்தில் ஒருவன் படத்துல அடிமைகள் எல்லாம் சொல்வாங்கல இந்த கன்னித்தீவுக்கே உழைச்சு இரையாக வேண்டியது தானானு? அப்போ புரட்சித்தலைவர் ஒரு என்ட்ரி கொடுப்பார். ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமேனு… அப்படி ஒரு மாற்றத்திற்கான தலைவனைத் தான் இந்த புதுச்சேரி மக்கள் இத்தனை ஆண்டுகளா தேடிட்டு இருக்காங்க.
அதுவும் எப்படிப்பட்ட தலைவனை தெரியுமா?. அவங்கள சுரண்டாத ஒருத்தன, மக்களை பணயமா வச்சு தங்களோட பொருளாதாரத்தை உயர்த்திக்காத ஒருத்தன, மாநிலத்தோட வளர்ச்சிய மறந்து தங்களோட வளர்ச்சிய மட்டும் நெனக்காத ஒருத்தன,….
இதெல்லாம் சாத்தியமாங்க.. அப்படியெல்லாம் நடக்குமாங்கனு.. ஒருசிலர் புலம்புறது காதுல கேக்குது..
அப்படிப்பட்ட தன்னலமற்ற தலைவர்கள் இந்த வரலாற்றுல இருந்து இருக்காங்க.
1965-ல சுதந்திரம் பெற்றபோது சிங்கப்பூர் ஒரு குட்டித் தீவு. பெரிய அளவுக்கு வளர்ச்சியோ, தொழிற்சாலைகளோ இல்லை. ஆனால் ஒரு மாபெரும் கனவை சுமந்து வந்த லீ குவான் யூ என்ற ஒரு தலைவர் அவங்களுக்கு கிடைச்சாங்க. கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு இந்த 3 விஷயத்தை முன்னிலைப்படுத்தி ஊழலை ஒழிச்சி, நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்த்து வெறும் 30 வருஷத்துல சிங்கப்பூரை ஒரு கனவு தேசமா மாத்துனாரு. சரியான தலைவனை தேர்ந்தெடுத்தா ஒரு நாடு எப்படி தடாலடியா முன்னேறும் என்பதற்கு சிங்கப்பூர் ஒரு உதாரணம்.
அந்த பக்கம் சிங்கப்பூர்னா, இந்த பக்கம் துபாய். நம்ம புதுச்சேரி மாதிரியே சாதாரண ஒரு மீன்பிடி கிராமம் தான். 1960 வரைக்கும் அங்க ஒண்ணுமே இல்ல. ஆனா எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இன்றைய தேதிக்கு உலகின் தலைசிறந்த நகரம் அதுதான். எப்படி சாத்தியம் ஆச்சு. வெறும் எண்ணெய் வளம் மட்டும் இருந்ததாலயா-.. தன்னோட கஜானாவுல இருந்த கடைசி பொட்டு தங்கம் வரைக்கும் தொழில் முதலீடுகளிலும், உள்கட்டமைப்புகளிலும் போட்டாரு துபாய் அரசர் ஷேக் ரஷீத் அல் மக்தோம்.. அந்த விதை தான் இன்னிக்கு காங்கிரீட் காடா முளைச்சு எழுந்து நிக்குது.
அப்படின்னா.. சரியான ஒரு தலைவன தேர்ந்தெடுத்தா ஒரு நாடு சுபிட்சம் அடையும் என்பது உண்மை ..
புதுச்சேரிக்கு அப்படி யார் இருக்கா சொல்லுங்க.. இப்போ இருக்குறவங்க இத்தனை வருஷமா என்ன செஞ்சிட்டு இருந்தாங்க சொல்லுங்க..
ஆனா இதுக்கான காலம் கனிஞ்சு இருக்குனுதா சொல்லணும். ஆமாங்க, இது மாற்றத்திற்கான நேரம். சிங்கப்பூரை போல, துபாயைப் போல நம்ம புதுச்சேரியையும் மாத்த முடியும் என்ற கனவை ஏந்தி வருது ஜேசிஎம் மக்கள் மன்றம்.
புதுச்சேரிய மாத்துறதுக்கு யார் வேணா கனவு காணலாங்க, ஆனா, செஞ்சு முடிக்க முடியுமா என்ற கேள்வியும் காதுல விழுது.
தன்னோட 37 வயசுக்குள்ள ஜேசிஎம் (ஜோஸ் சார்லஸ் மார்டின்) செஞ்சு இருக்குற வேலைகளை பார்த்தா, அட யார் சாமி இது? என்று வியக்காமல் இருக்க முடியாது.

இந்தியாவோட நரம்புகளா ஓட்றது ரயில்கள்தான். அது மத்திய அரசோட கட்டுப்பாட்டுல இருக்கு. ஆனா சௌத் ஸ்டார் ரயில் என்ற பேர்ல ஆன்மிக தலங்களை ஒன்றிணைக்கிற தனியார் ரயில் சேவையை வெற்றிகரமா நடத்திட்டு வர்றாரு ஜேசிஎம்.
குழந்தைகள் கிட்ட இருக்குற திறமைகளை கண்டுபிடிச்சு வாழ்க்கையில அவங்கள அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்துறதுக்கு குளோபல் சைட்ல் ப்ராடிஜி விருதுனு ஒண்ணு தர்றாரு..
வெறும் லாபத்துக்காக தன்னோட நிறுவனத்தை நடத்தாம சமுதாய மேம்பாட்டுக்காக உழைக்கிற இவர இங்கிலாந்து நாடாளுமன்றமே கார்டியன் ஆஃப் ஏஞ்சல்ஸ்-னு விருது கொடுத்து பாராட்டி இருக்கு.
காமராஜ்நகர் தொகுதியில் ஒரு சத்திய தருமசாலை-னு சொல்ற அளவுக்கு ஒவ்வொரு நாளும் நூத்துக்கணக்கான மக்களுக்கு வயிறார சாப்பாடு போட்டுட்டு வர்றாரு.
அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடியே தன்னோட துறையில இவ்வளவு அர்ப்பணிப்போட இருக்குற ஒருத்தர் நேரடி அரசியலுக்கு வந்தா எப்படி இருக்கும்.
அரசியலுக்கு வந்து ஊழல் செஞ்சு அதுல காசு பார்க்க வேண்டிய தேவை இவருக்கு இல்ல. இருக்குற காச இந்த சமூகத்துக்கு இன்னும் என்னவெல்லாம் பண்ணலாம்னு பார்த்து பார்த்து பண்ணிட்டு வர்றாரு..
அதேசமயம், ஒட்டுமொத்த சமூக மாற்றம் என்பது ஒரு தனியார் நிறுவனத்தால செஞ்சிட முடியாது. அதுக்கு அரசியல் அதிகாரம் என்ற ஒரு கருவி தேவை என்ற புரிதல் அவருக்கு ஏற்பட்டு இருக்கு.
அதனால தான் இந்த ஜேசிஎம் மக்கள் மன்றம் உருவாகி இருக்கு.

அவரோட பிசினஸ் மைண்ட்-க்கு இன்னும் பல்லாயிரம் கோடிகள சம்பாதிக்க முடியும். ஆனால் இந்த புதுச்சேரி மாறணும், சிங்கப்பூரை போல – துபாயைப் போல வளர்ந்த நாடா உருமாறணும் என்ற உந்துதல் தான் அவரை அரசியல் களத்திற்குள்ள கொண்டு வந்து இருக்கு.
இப்படிப்பட்ட ஒருத்தர, தன்னலமற்ற ஒருத்தர, ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லாத ஒருத்தர, கனவுகள சுமந்துட்டு வர்ற ஒருத்தர தோள்கொடுத்து தட்டிக்கொடுத்து வரவேற்க வேண்டிய பொறுப்பு நம்ம புதுச்சேரிக்கு இருக்கு..
இன்னும் எத்தனை காலம் தான் போலி அரசியல்வாதிகளோட கபடநாடகங்களுக்கு நாம நம்ம எதிர்காலத்தை பலிகொடுக்கப் போறோம்.
எத்தனையோ சுயநலவாதிகளுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கு இந்த புதுச்சேரி. ஆனா இதையெல்லாம் மாத்தணும் என்ற பொதுநல சிந்தனையோடு வர்ற ஜேசிஎம் போன்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டிய தருணம் இது.
வேலைதேடி வெளிநாட்டுக்கும், வெளிமாநிலத்திற்கும் ஓடிய காலம்போய், புதுச்சேரிக்கு போனா பொழச்சிக்கலாம்னு எல்லாரும் நம்ம மண்ண தேடி ஓடிவர்ற ஒரு காலத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது.
புதுமைக்கு தயாராகட்டும் புதுச்சேரி, வரவேற்போம், வாய்ப்புக் கொடுப்போம் ஜேசிஎம்-க்கு..