Friday, September 12, 2025
Homeஅரசியல்‘இ.பி.எஸ். துரோகத்தின் மொத்த வடிவம்’ - கூட்டணியில் இருந்து விலகுகிறார் டிடிவி தினகரன்?

‘இ.பி.எஸ். துரோகத்தின் மொத்த வடிவம்’ – கூட்டணியில் இருந்து விலகுகிறார் டிடிவி தினகரன்?

எடப்பாடி பழனிசாமி துரோகத்தின் மொத்த வடிவம் என்றும் அவரது ஆணவப் பேச்சு முறியடிக்கப்பட வேண்டும் என்றும் டிடிவி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “துரோகத்தின் மொத்த உருவமான எடப்பாடி பழனிசாமி கட்சியின் தொண்டர்களின் எண்ணத்தை சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்.

எங்கு சென்றாலும் தன்னை முதல்வராக கூறிக் கொள்கிறார். அவரது அகங்கார, ஆணவப் பேச்சு முறியடிக்கப்பட வேண்டும். நல்ல முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக டிசம்பர் 6ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க நல்ல முடிவை எடுக்கப்படும் .

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால் டிசம்பர் 6ம் தேதி முறைப்படி அறிவிக்கப்படும்” என்றார்.

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், ஆளும் திமுக ஒருபுறம், எதிர்க்கட்சியான அதிமுக மற்றொரு புறமும் அரசியல் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை தனித்தே போட்டியிட்டு வந்த சீமானும் களத்தில் இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி முதல் இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். மேலும், வருகின்ற 17ஆம் தேதி முதல் மக்களை நேரடியாக சந்திக்க சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாகவும் அறிவித்து உள்ளார். இதனால், கூட்டணி கணக்குகள் மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments