ஆஸ்திரேலியா ஏ-க்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய ஏ பிரிவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி, இந்திய ஏ அணிக்கு எதிராக 2 ப் ஓட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் தொடர் வரும் 16-ம் தேதி லக்னோவில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், இத்தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில், ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும், துருவ் ஜூரெல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த அணியில், ”என் ஜெகதீசன், சாய் சுதர்சன், துருவ் ஜூரல், தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், கலீல் அகமது, யாஷ் தாகூர்” ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
2-வது போட்டிக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் மற்றும் முகமது சிராஜ் இடம்பெறுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.