அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதிமுகவில் அனைவரும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசி இருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் பேசியதால் அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து இபிஎஸ் அறிவித்தார். இந்த சூழலில் கட்சி தலைமை எடுத்த நடவடிக்கைக்கு காலம் பதில் சொல்லும் என செங்கோட்டையன் அறிவித்தார்.
இப்படி அதிமுகவில் அதிரடி நடவடிக்கள் எடுக்கப்படுவதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், ராமநாதபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ”தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றிட ஒன்றிணைவோம் வெற்றி பெறுவோம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புரட்சித்தலைவி அம்மாவின் நூறாண்டு கால கழக வெற்றி கனவை நிறைவேற்ற கழக மூத்த முன்னோடி முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் முயற்சிகளுக்கு அதிமுக தொண்டர்களின் சார்பில் நன்றி என கூறி ராமநாதபுரம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மண்டபம் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் கவனத்தை ஈர்த்துள்ளன.