Thursday, September 11, 2025
HomeசினிமாDUDE படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் Oorum Blood வீடியோ பாடல் வெளியானது..

DUDE படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் Oorum Blood வீடியோ பாடல் வெளியானது..

இன்றைய தேதிக்கு இளைஞர்களின் ஒட்டுமொத்த ஹாட்ஸ்டார் யார் என்றால் அது பிரதீப் ரங்கநாதன் தான். அதுவும் ட்ராகன் படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் அதிரிபுதிரி உயரத்திற்கு சென்றுள்ளது.

லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.

இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி கவனத்தை பெற்றது. இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரபல இடங்களில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. மமிதாவின் அசத்தல் நடனம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில் பிரதீப் ரங்கநாதனின் Lik திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments