மாருதி சுசூகியின் முதல் மின்சார கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
அகமதாபாத்தில் உள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சாரக் காரான ‘e-VITARA’வை கொடியசைத்து அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி. முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்படும் e-VITARA கார்கள், 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் 2026ன் முதல் காலாண்டில் இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகமாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது