அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வரும் 9ம் தேதி மீண்டும் செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியல்களம் பரபரப்பாகியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, மக்கள் சந்திப்பு, பிரச்சாரம் என அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 5ம் தேதி கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அதிமுகவில் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்றும், அதற்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் மக்கள் பிரச்சாரத்தில் தான் பங்கேற்கபோவதில்லை என்றும் அறிவித்தார்.
செங்கோட்டையன் கூறியதை தொடர்ந்து அவரை அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் அதிமுகவில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் செங்கோட்டையன் வரும் 9ம் தேதி மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும், அப்போது முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாளை மறுநாள் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தும் செங்கோட்டைஇயன், அன்றே அதிரடியான சில தகவல்களை பேசலாம் என கூறப்படுகிறது. செங்கோட்டையனின் இந்த அதிரடி நடவடிக்கையால் அதிமுகவில் இருக்கும் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.