புதுச்சேரியில் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில், தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மிதிவண்டி ஓட்ட நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
புதுச்சேரி அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்குனரகம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில், புதுச்சேரி கேலோ உற்சவ தேசிய விளையாட்டு தினம் நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு விளையாட்டு திருவிழாவின் ஒரு பகுதியாக மிதிவண்டி ஓட்ட நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் நடைபெற்றது. இதில், திரளான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியினை துணைநிலை ஆளுனர் கைலாஷ்நாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், விளையாட்டுத்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டனர்.
இது தவிர, நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர் செல்வகணபதி, தலைமை செயலாளர், விளையாட்டுத்துறை செயலாளர், மற்றும் பல்வேறு துறை செயலர்களும், காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.