புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார்.

கடந்த 27-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாகூர் பகுதியில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை காண்பித்து ஜோஸ் சார்லஸ் மார்டினிடம் வாழ்த்து பெற்றனர்.

பின்னர் திருபுவனை தொகுதி, மதகடிப்பட்டு பகுதியில் உள்ள அருள்மிகு நூதன வெற்றி விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்ததோடு, கூடியிருந்த பக்தர்களுக்கு அவர் அன்னதானம் வழங்கினார். முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் தலைமையில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதியிலும், நெல்லித்தோப்பு தொகுதியிலும் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானமும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

மேலும் காலாப்பட்டு, உழவர்கரை சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாக்களில் ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்றார்.

இந்நிலையில் புதுச்சேரி மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட அரியூர் கிராமப்பகுதியில் அமைந்துள்ள சுந்தர விநாயகர் ஆலயத்தில் கண்ணபிரான் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

ஆன்மீக நிகழ்வான விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியிலும், பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி அதனை ஒரு நலத்திட்ட விழாவாக ஜோஸ் சார்லஸ் மார்டின் மாற்றி விட்டார் என புதுச்சேரி மக்கள் பேசி வருகின்றனர்.