புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் 50-க்கும் மேற்பட்ட மாடல் அழகிகளின் ஒய்யார நடையினை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.
புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே தனியார் அமைப்பு சார்பில் ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இப்போட்டியில் தமிழிகம், புதுச்சேரி மற்றும் பெங்களூர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாடல் அழகிகள் கலந்து கொண்டு வண்ண வண்ண ஆடைகள் அணிந்து விதவிதமான ஸ்டைலில் ஒய்யாரமாக நடந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
தனிச்சுற்று, இரட்டையர் சுற்று, குழு என மூன்று சுற்றாக நடைபெற்ற ரேம்ப் வாக்கில் பாரம்பரிய உடை, மாடலிங் உடை என வண்ண வண்ண ஆடைகள் அணிந்து அழகிகள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில், நடந்து தங்களது அழகையும் நளினத்தையும் வெளிப்படுத்தி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார்கள்.
கடற்கரை சாலையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவை புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். மேலும் அழகி போட்டியில் கலந்துகொண்ட மாடலிங் அழகிகளுக்கு தனியார் நிறுவனம் சார்பில் பரிசுகள் மற்றும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.