சலூன் கடை திறப்பு விழாவிற்காக 20 பவுன்சர்கள் புடைசூழ சென்ற நடிகை நிக்கி கல்ராணியை சுற்றி ஏராளமான ரசிகர்கள் போட்டிப் போட்டு செல்ஃபி எடுத்ததால் நகர்புறப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் மகாத்மா காந்தி வீதியில் என்.வி சலூன் கடையை வருகிறது, இதன் இரண்டாவது கிளை புதுச்சேரி அண்ணா சாலையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி என்.வி சலூனை திறந்து வைத்தனர்.
திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த பிரபல நடிகை நிக்கி கல்ராணி 20 பவுன்சர்கள் புடை சூழ பலத்த பாதுகாப்புடன் சாலையில் அமைக்கப்பட்ட மேடை மீது ஏறி ரசிகர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அங்கே அமைக்கப்பட்டிருந்த ஏர் கண்னை வெடிக்க வைத்து ரசிகர்கள் மீது பேப்பர் மழை தூவி உற்சாகமடைந்தார் இதனை கண்ட ரசிகர்களும் பரவசத்தில் விசில் அடித்தும் ஆரவாரம் செய்தும் மகிழ்ந்தனர்.
மேலும் மேடையில் பேசிக் கொண்டிருந்த நிக்கி கல்ராணியிடம் அவரது ரசிகர்கள் செல்பி எடுத்தும் போட்டோக்கள் எடுத்தும் மகிழ்ந்தனர். கடை திறப்பு விழாவிற்கு நடிகை நிக்கி கல்ராணி வந்து இருக்கிறார் என்ற தகவல் அறிந்தவுடன் அவரை காண்பதற்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் திரண்டது.
இதனால் நகரப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது இதனை அடுத்து பவுன்சர்களின் உதவியோடு விழாவை முடித்துக் கொண்டு நிக்கி கல்ராணி புதுச்சேரியில் இருந்து புறப்பட்டார் அதன் பிறகு போக்குவரத்து சரியானது.