விநாயகர் சதுர்த்தியையொட்டி சார்லஸ் குழும தலைவரும், சமூக சேவகருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் இன்று விடியற்காலையில் புதுச்சேரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விநாயகரை தரிசிக்க கோயிலில் கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

பின்னர் புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற விழாவில் ஜே.சி.எம் மக்கள் மன்றத்தையும், SS News Digital-யும் தொடங்கி வைத்தார். மக்கள் மன்றத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ரீகன் ஜான்குமாரிடம் அதற்கான லோகோவையும், SS News Digital-ன் ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள ஊடகவியலாளர் கருப்பசாமியிடம் அதற்கான லோகோவை வழங்கி இருவருக்கும் வாழ்த்து கூறினார்.
இந்த நிகழ்விற்கு பிறகு காமராஜர் நகர் தொகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு கொண்டாட்டத்தில் பங்கேற்றிருந்த பக்தர்களுக்கு அவர் அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர் ஜான்குமார், எம்.எல்.ஏ ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் தலைமையில் பாகூர் தொகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.இதில் பங்கேற்பதற்காக சென்ற ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு அப்பகுதி மக்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில் JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் பேசுகையில் பாகூர் பகுதி மிகவும் பின்தங்கி போய் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட நகரத்தை சார்ந்தே இருக்க வேண்டி உள்ளது. மக்களுக்கான தேவைகளை நாம் பூர்த்தி செய்ய நினைத்து களத்திற்கு வந்தால் பல்வேறு இடத்தில் இருந்து மிரட்டல்கள் வருகிறது. இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாம் பயப்பட போவதில்லை, வரும் 2026-ல் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் மிகப் பெரிய மாற்றம் உருவாகும். அது மக்கள் விரும்பும் மாற்றமாக இருக்கும். புதுச்சேரியை இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக அவர் மாற்றிக் காட்டுவார் என பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய ஜோஸ் சார்லஸ் மார்டின் உலக நாடுகளைப் போல் இந்தியாவையும் மாற்ற வேண்டும் என்ற கனவு குறித்து பேசினார். மேலும் புதுச்சேரியை சிங்கப்பூர் போன்று மாற்ற வேண்டும் என்ற தனது உயர்ந்த நோக்கத்தையும் மக்களிடையே எடுத்துரைத்தார். மேலும் பசியில்லா புதுச்சேரி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என பேசினார். பின்னர் பாகூர் பகுதி இளைஞர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் உறுதியளித்தார். உங்களுக்காக உழைக்கும் ரீகனுக்கு நீங்கள் எப்போதும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மற்றும் ரீகன் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பாகூர் நிகழ்விற்கு பிறகு நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று அங்கும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். மேலும் அப்பகுதியில் நீண்ட நாட்களாக கட்டப்படும் விநாயகர் கோயில் கட்டுமான பணிகளை விரைந்து முடித்துக் கொடுக்க் உதவுவதாக உறுதியளித்தார்