ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி, 28ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் “ஏ” பிரிவில் இந்தியா, ஓமன், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம் பிடித்துள்ளன. “பி” பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன. 8 அணிகளும் தொடருக்கு தயாராகி வருகின்றன.
இந்த போட்டிக்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கின்றன. இத்தொடர் நாளை தொடங்கி 7ஆம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். போட்டிகள் அனைத்தும் சார்ஜாவில் நடத்தப்பட இருக்கின்றன.
முத்தரப்பு தொடர் நாளை தொடங்கும் நிலையில், மூன்று அணிகளின் கேப்டன்களான முகமது வாசீம், சல்மான் ஆகா, ரஷித் கான் ஆகியோர் கோப்பையுடன் போஸ் கொடுத்துள்ளனர்.