இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 14ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் டி20 ஃபார்மெட்டில் தொடக்க வீரராக களமிறங்கி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அலெக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்து அணிக்கு விளையாடுகையில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்தாலும், லீக் போட்டிகளில் அபாரமாக ஆடி வருகிறார்.
அந்த வகையில், கரீபியன் லீக் தொடரில் அலெக்ஸ் ஹேல்ஸ், டிரினிடாட் நைட்ஸ் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சனிக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் சிறப்பாக ஆடிய அவர், 43 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். மேலும், டி20 போட்டிகளில் 40ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக, மேற்கிந்திய அணியின் ஜாம்பவான்கள் கிறிஸ் கெயில் (14,562), மற்றும் கீரன் பொல்லார்ட் (14,012) இருவரும் டி20 போட்டிகளில் 14ஆயிரம் ரன்களை கடந்திருந்தனர். இந்த போட்டியின் மூலம் அலெக்ஸ் ஹேல்ஸ் (14,024) இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் அதிரடி வார்னர் (13,595) நான்காவது இடத்தையும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் மாலிக் (13,571) ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஹேல்ஸ், நிறைய திறமைகளைக் கொண்டிருந்தாலும், மைதானத்திற்கு வெளியே நிறைய சர்ச்சைகுறிய விஷயங்களில் ஈடுபட்டதால், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பு, ஹேல்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், 2017ஆம் ஆண்டில், அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும், தற்போதைய டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருவரும் பிரிஸ்டல் இரவு விடுதிக்கு வெளியே மோதலில் ஈடுபட்டனர். இந்த பஞ்சாயத்து இங்கிலாந்து நீதிமன்றம் வரை சென்றது. மேலும், இருவரும் இணைந்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி சகவீரர்கள் இருவருடன் மோதிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.