சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிச்சயமற்ற தன்மை, டிரம்பின் வரி தொடர்பான அறிவிப்புகள் மற்றும் உலகளாவிய போர் நெருக்கடிகள் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,240 ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.75,000-ஐ கடந்து, ஆகஸ்ட் 8-ஆம் தேதி ரூ.75,760-ஐ தொட்டு தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இதன்பிறகு தங்கம் விலை சற்று குறைந்து மக்களுக்கு ஆறுதல் அளித்தது. ஆனால் கடந்த ஆறு நாட்களாக தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது.
ஆகஸ்ட் 21 முதல் இன்று வரை (ஆகஸ்ட் 28) ஒரு சவரனுக்கு சுமார் ரூ.120 உயர்ந்து, ரூ.75,240 ஐ தொட்டுள்ளது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
27.08.2025 – ஒரு சவரன் – ரூ.75,120
26.08.2025 – ஒரு சவரன் – ரூ.74,840
25.08.2025 – ஒரு சவரன் – ரூ.74,440
24.08.2025 – ஒரு சவரன் – ரூ.74,520
23.08.2025 – ஒரு சவரன் – ரூ.74,520
22.08.2025 – ஒரு சவரன் – ரூ.73,720
பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு முதலீடாக தங்கம் இருந்தாலும், இந்த ஏற்ற இறக்கங்கள் முதலீட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் எதிர்கால சேமிப்பிற்காகவும், சமூக அந்தஸ்துக்காகவும் தங்கத்தை வாங்க நினைக்கும் இல்லத்தரசிகள் இந்த விலை உயர்வால் கவலை அடைந்துள்ளனர்.