தேனி மாவட்டம் கம்பம் அருகே கல்குவாரி பிரச்சினை காரணமாக வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் கடந்த 26 ஆம் தேதி இரவு சதீஷ்குமார் என்ற சசி கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்து கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ராயப்பன்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கல்குவாரி சம்பந்தமாக இருந்த முன் விரோதம் காரணமாக வாலிபர் சதீஷ்குமார் என்ற சசி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த கொலை சம்பந்தமாக பத்துக்கும் மேற்பட்ட கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த போலீசார் கொலை சம்பவம் மற்றும் கொலை செய்ய தூண்டியவர் குளித்து தீவிர விசாரணை மேற்கொண்டு காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி குரு இளங்கோ, அல்லி பாலமுருகன், அமைதி ராஜா, மற்றும் மணிமாறன் ஆகிய ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கொலை குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக விசாரணை செய்து தேடி வருகின்றனர்.
கல்குவாரி பிரச்சனை சம்பந்தமாக வாலிபர் படுகொலை செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு மேலும் தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.