சீனாவின் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடம் இருந்து ரத்தத்தை எடுத்த இளைஞரால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சீன நாளிதழில் வெளியான செய்தியின்படி, யு என்ற பெண்ணின் வீட்டிற்குள் கதவை தள்ளிவிட்டு லி என்ற இளைஞர் உள்ளே நுழைந்துள்ளார். யு தூங்கி கொண்டிருந்ததை பார்த்த லி, தன்னிடம் இருந்த மயக்க மருந்து தடவிய துணியை எடுத்து யு முகத்தில் வைத்து அவரை மயக்கமடைய செய்துள்ளார். பின்னர், அந்த பெண்ணின் கையில் இருந்து ரத்ததை லி எடுத்துள்ளார்.
அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் கணவர் தன் மனைவிக்கு நடந்ததை பார்த்து கூச்சலிட்டுள்ளார். லி அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், மயக்கமடைந்து இருந்த தன் மனைவியை எழுப்பிய கணவர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது, அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து உடலில் இருந்து ஊசி மூலம் ரத்தம் எடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் லி -யை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பிறர் வீட்டுக்குள் நுழைவது தனக்கு மன அழுத்தத்தை குறைப்பதாக லி கூறி அதிர்ச்சி அளித்தார். லியின் வாக்குமூலத்தை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் அடைத்தனர். லி க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.