அரசு முறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக மோதல் இருந்து வரும் சூழலில் ஜப்பான் போன்ற தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணத்தை மேற்கொண்டுள்ளார். நேற்றிரவு 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார்.
ஜப்பானில் நடைபெறும் 15வது இந்திய – ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்கும் விதமாக பிரதமர் மோடி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி இந்தியா – ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பான் மாநாட்டின் ஒரு பகுதியாக அநாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்கும் பிரதமர் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜப்பான் மாநாட்டை முடித்து கொண்டபின் 31ம் தேதி பிரதமர் மோடி சீனா செல்கிறார். அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின் பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்திய, அமெரிக்க உடனான வர்த்தக போர் தீவிரமடைந்து வரும் சூழலில் பிரதமர் மோடியின் ஜப்பான் பயனம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.