Skip to content
SS News
Breaking

உலகம்

Global affairs, diplomacy and international headlines.

உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விபத்து – 6 பேர் உ*ரிழந்திருக்கலாம் என அச்சம்!

உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விபத்து – 6 பேர் உ*ரிழந்திருக்கலாம் என அச்சம்!

உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் அருகே ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. பத்ரிநாத் கோயிலில் இருந்து டேராடூனுக்கு 5 பயணிகள் மற்றும் ஒரு விமானி என மொத்தம் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக மலைப்பகுதியில் விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான VT-HCX ஹெலிகாப்டர், வெள்ளிக்கிழமை மதியம் 1.14 மணியளவில் பத்ரிநாத்தில் இருந்து புறப்பட்டது. ஜோஷிமத் பள்ளத்தாக்குப் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது….

More from உலகம்

ஒரே அறிக்கையால் சரிந்த கூகுள் தாய் நிறுவனத்தின் பங்குகள் – ஒரே நாளில் ரூ.47 லட்சம் கோடி இழப்பு!

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், பங்குச்சந்தையில் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாததால், முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தனர். இதன் காரணமாக அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற வர்த்தகத்தில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 12.6 சதவீதம் சரிந்தன. இதனால் ஒரே நாளில் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.47 லட்சம் கோடிக்கும்…

ஒரே அறிக்கையால் சரிந்த கூகுள் தாய் நிறுவனத்தின் பங்குகள் – ஒரே நாளில் ரூ.47 லட்சம் கோடி இழப்பு!

அமெரிக்க அரசு பத்திரங்களின் வருவாய் குறைவு – வட்டி விகித முடிவை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள்!

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், அக்டோபர் மாதக் கூட்டத்தில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் தற்போதைய நிலையைத் தொடர முடிவு செய்தது. இதையடுத்து, அமெரிக்க அரசு பத்திரங்களின் வருவாய் விகிதங்கள் சரிவைக் கண்டுள்ளன. அக்டோபர் 30ஆம் தேதி ஆசியச் சந்தை வர்த்தகத்தில், 2 ஆண்டு மற்றும் 10 ஆண்டு கால அமெரிக்க அரசு பத்திரங்களின் வருவாய் விகிதங்கள் ஏழு வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்தன. 2 ஆண்டு பத்திர வருவாய் 4.559 சதவீதமாகவும், 10…

அமெரிக்க அரசு பத்திரங்களின் வருவாய் குறைவு – வட்டி விகித முடிவை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 3% உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தற்போது 60% ஆக உள்ள அகவிலைப்படி 63% ஆக உயர்கிறது. இந்த உயர்வு 2026 ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!

தண்ணீரில் 40.74 கி.மீ பைக் ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த சீன இளைஞர்!

சீனாவில் மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை தண்ணீரில் 40.74 கிலோமீட்டர் தூரம் ஓட்டி ஜாங் சூ (Zhang Xue) புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள மாயாங் பகுதியில், அக்டோபர் 25ஆம் தேதி இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. Zhang Xue Motorcycle நிறுவனத்தின் நிறுவனர் ஜாங் சூ, தண்ணீரில் பயணிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட MX450 பைக்கை ஓட்டி, திறந்த நீர்ப்பரப்பில் மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை அதிக தூரம் இயக்கியதற்கான உலக சாதனையைப் படைத்தார்….

தண்ணீரில் 40.74 கி.மீ பைக் ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த சீன இளைஞர்!

ஸ்பெயினில் நேருக்கு நேர் மோதிய 2 ரயில்கள்! பலர் காயம்; ரயில் சேவைகள் நிறுத்தம்!

ஸ்பெயின் நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள டோலிடோ மாகாணத்தில் இன்று (அக்டோபர் 28) இரண்டு அதிவேக ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பல பயணிகள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஸ்பெயின் ரயில்வே உள்கட்டமைப்பு நிர்வாக அமைப்பான ADIF வெளியிட்ட தகவலின்படி, மாட்ரிட் நகரிலிருந்து தெற்கு ஸ்பெயினின் ஆண்டலூசியா பகுதியை இணைக்கும் அதிவேக ரயில் பாதையில் இந்த…

ஸ்பெயினில் நேருக்கு நேர் மோதிய 2 ரயில்கள்! பலர் காயம்; ரயில் சேவைகள் நிறுத்தம்!

இஸ்ரேல் தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்கு முன்னிலை! ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லை !

இஸ்ரேலில் அக்டோபர் 27, 2026 அன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட வெளியேறும் கருத்துக்கணிப்புகள் (Exit Polls), பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணியை விட எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு லேசான முன்னிலை இருப்பதைக் காட்டின. இருப்பினும், 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் (Knesset), ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 61 இடங்கள் எந்தக் கூட்டணிக்கும் கிடைக்கவில்லை. ஆரம்பகட்ட கருத்துக்கணிப்புகளின்படி, முன்னாள் ராணுவத் தலைமை அதிகாரி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 52 முதல் 53 இடங்களையும்,…

இஸ்ரேல் தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்கு முன்னிலை! ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லை !

கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை விவகாரம்! ஐ.நா. சபையில் அமெரிக்கா–கியூபா மோதல்

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள நீண்டகாலப் பொருளாதாரத் தடையை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தும் தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போது, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அமெரிக்கா மற்றும் கியூபா பிரதிநிதிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற விவாதம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ஐ.நா. சபையில் அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ், கியூபா அரசின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கியூபா வெளியுறவுத் துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ், அமெரிக்கத் தூதரின்…

கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை விவகாரம்! ஐ.நா. சபையில் அமெரிக்கா–கியூபா மோதல்

இந்தியா வந்த லிச்சென்ஸ்டைன் இளவரசர் அலோயிஸ்! வரவேற்ற குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி!

ஐரோப்பிய நாடான லிச்சென்ஸ்டைனின் பட்டத்து இளவரசர் அலோயிஸ், நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக அக்டோபர் 25ஆம் தேதி இந்தியா வந்தார். அக்டோபர் 25 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயணம், இந்தியா–லிச்சென்ஸ்டைன் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ள இளவரசர் அலோயிஸுடன், அவரது மனைவி இளவரசி சோஃபி மற்றும் உயர்மட்ட அதிகாரிகள், தொழில்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரும் வந்துள்ளனர். மும்பை வந்தடைந்த அவர்,…

இந்தியா வந்த லிச்சென்ஸ்டைன் இளவரசர் அலோயிஸ்! வரவேற்ற குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி!

லூலாவின் வெற்றியை ஏற்றுக்கொண்ட போல்சனாரோ கட்சி!

பிரேசில் அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றி பெற்றதை, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஃபிளாவியோ போல்சனாரோவின் லிபரல் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. இருப்பினும், தேர்தல் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. அக்டோபர் 25, 2026 அன்று நடைபெற்ற இரண்டாம் சுற்றுத் தேர்தலில், தற்போதைய அதிபர் லூலா 51.79 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஃபிளாவியோ போல்சனாரோ 48.21 சதவீத வாக்குகளைப்…

லூலாவின் வெற்றியை ஏற்றுக்கொண்ட போல்சனாரோ கட்சி!

அமெரிக்காவில் 400-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் மீது சந்தேகம்! வாக்குகளைத் தனியாக வைக்க நீதித்துறை கோரிக்கை!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில், அமெரிக்கக் குடியுரிமை இல்லாமல் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் 400-க்கும் மேற்பட்டோரின் வாக்குகளைத் தனியாக ஒதுக்கி வைக்குமாறு அந்நாட்டு நீதித்துறை கோரிக்கை விடுத்துள்ளது. அக்டோபர் 26, 2026 அன்று வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்த நபர்கள் கடந்த தேர்தல்களில் சுமார் 1,500 வாக்குகளைச் செலுத்தியிருக்கலாம் என நீதித்துறை தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் இவர்கள் வாக்களித்தால், அவர்களின் குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் தகுதி உறுதிசெய்யப்படும் வரை அந்த வாக்குகளை…

அமெரிக்காவில் 400-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் மீது சந்தேகம்! வாக்குகளைத் தனியாக வைக்க நீதித்துறை கோரிக்கை!

பிரேசில் தேர்தலில் முறைகேடு? டிரம்ப் கருத்தால் சர்ச்சை!

பிரேசில் அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவுகள் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். அக்டோபர் 26, 2026 அன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பிரேசில் தேர்தல் முறைகேடாக நடைபெற்றது போல் தெரிகிறது என்று கூறினார். எனினும், தனது கருத்துக்கு ஆதரவாக அவர் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற்ற பிரேசில் அதிபர் தேர்தலின் இரண்டாம் சுற்றில், தற்போதைய அதிபர் லுலா…

பிரேசில் தேர்தலில் முறைகேடு? டிரம்ப் கருத்தால் சர்ச்சை!

பிரேசில் அதிபர் தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி!

பிரேசில் நாட்டில் அக்டோபர் 25, 2026 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலின் இரண்டாம் சுற்றில், தற்போதைய அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் மகனும், செனட்டருமான ஃபிளாவியோ போல்சனாரோ தோல்வியடைந்துள்ளார். தேர்தல் முடிவுகளின்படி, லூலா டா சில்வா 51.75 சதவீத வாக்குகளையும், ஃபிளாவியோ போல்சனாரோ 48.25 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் மூலம் லூலா நான்காவது முறையாக பிரேசில் அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார்….

பிரேசில் அதிபர் தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி!

செர்பியாவில் 14 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த மாணவர் இயக்கம்!

ஐரோப்பிய நாடான செர்பியாவில், அக்டோபர் 25, 2026 அன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாணவர்கள் தலைமையிலான ‘Student List – Students Win’ இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அலெக்சாண்டர் வுசிச்சின் அரசியல் ஆதிக்கத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் மாணவர் இயக்கம் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் எனத் தொடக்ககட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. மொத்தம் 250 இடங்களைக் கொண்ட செர்பிய நாடாளுமன்றத்தில், மாணவர் இயக்கம் 139 இடங்களையும், வுசிச்சின் செர்பிய முன்னேற்றக் கட்சி தலைமையிலான கூட்டணி 97…

செர்பியாவில் 14 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த மாணவர் இயக்கம்!

தைவானை உலுக்கிய சக்திவாய்ந்த புயல்! ஒருவர் உயி*ழப்பு; 500-க்கும் மேற்பட்டோர் காயம்!

தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த புயலின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்ததாகவும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 24-ஆம் தேதி வெளியான செய்திகளின்படி, புயலின் தாக்கம் காரணமாகப் பல பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் கனமழையால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், விமானச் சேவைகளிலும் இடையூறுகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாகப் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. தைவான் தீவு பசிபிக்…

தைவானை உலுக்கிய சக்திவாய்ந்த புயல்! ஒருவர் உயி*ழப்பு; 500-க்கும் மேற்பட்டோர் காயம்!

“அப்டிலாம் பண்ண முடியாது..!” அட்லாண்டிக் பெருங்கடலுக்குப் பெயர் மாற்ற டிரம்ப் கோரிக்கை; கூகுள் CEO சுந்தர் பிச்சை மறுப்பு!

அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை ‘டிரம்ப் பெருங்கடல்’ என மாற்றி கூகுள் மேப்ஸில் வெளியிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தக் கோரிக்கையை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு நிர்வாக மாற்றங்களையும் பெயர் மாற்ற நடவடிக்கைகளையும் டிரம்ப் முன்னெடுத்து வருகிறார். இந்தச் சூழலில், அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரைத் தனது பெயருடன் இணைத்து மாற்ற…

"அப்டிலாம் பண்ண முடியாது..!" அட்லாண்டிக் பெருங்கடலுக்குப் பெயர் மாற்ற டிரம்ப் கோரிக்கை; கூகுள் CEO சுந்தர் பிச்சை மறுப்பு!

ரஷ்யா விவகாரத்தில் தனது அணுகுமுறையை நியாயப்படுத்திய டிரம்ப் – அமெரிக்கர் விடுதலையால் புதிய விவாதம்!

ரஷ்யாவில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த அமெரிக்கக் குடிமகன் ஸ்டீபன் ஹப்பார்ட் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ரஷ்யக் கொள்கையை நியாயப்படுத்தியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் நேரடியாகக் கோரிக்கை விடுத்ததன் மூலம் ஹப்பார்டின் விடுதலை சாத்தியமானதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். 74 வயதான ஸ்டீபன் ஹப்பார்ட், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆவார். இவர் 2022-ஆம் ஆண்டு உக்ரைனின் இசியும் நகரில் இருந்தபோது ரஷ்யப் படைகளிடம் சிக்கினார். உக்ரைன்…

ரஷ்யா விவகாரத்தில் தனது அணுகுமுறையை நியாயப்படுத்திய டிரம்ப் – அமெரிக்கர் விடுதலையால் புதிய விவாதம்!

இந்திய விமானங்களுக்கான வான்வழித் தடையை நவம்பர் 24 வரை நீட்டித்த பாகிஸ்தான்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தொடர்ந்து நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், இந்திய விமானங்கள் தனது வான்வழியைப் பயன்படுத்துவதற்கான தடையை நவம்பர் 24ஆம் தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளதாக NDTV செய்தி தெரிவித்துள்ளது. எந்தெந்த விமானங்களுக்குத் தடை? இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் மட்டுமின்றி, இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான, அவற்றால் இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும். ராணுவ விமானங்களும்…

இந்திய விமானங்களுக்கான வான்வழித் தடையை நவம்பர் 24 வரை நீட்டித்த பாகிஸ்தான்!

கிம் ஜாங் உன்னுக்கு என்னாச்சு? வடகொரியாவின் அடுத்த தலைவராகப் பெண் வருகிறாரா?

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னுக்குப் பிறகு அந்நாட்டை ஆளப்போவது யார் என்ற கேள்வி சர்வதேச அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, அவரது மகள் கிம் ஜூ ஏ மற்றும் சகோதரி கிம் யோ ஜாங் ஆகியோரின் அரசியல் முக்கியத்துவம் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. வடகொரியாவில் கடந்த பல தலைமுறைகளாக கிம் குடும்பத்தினரே ஆட்சி செய்து வருகின்றனர். அந்த வகையில், தற்போதைய தலைவர் கிம் ஜாங் உன்னின் வாரிசு யார் என்பது குறித்த தகவல்கள் உலக…

கிம் ஜாங் உன்னுக்கு என்னாச்சு? வடகொரியாவின் அடுத்த தலைவராகப் பெண் வருகிறாரா?

காசாவில் 5 லட்சம் பேருக்கான உணவு உதவி குறைப்பு! நிதி நெருக்கடியில் உலக உணவுத் திட்டம்!

காசாவில் தொடர்ந்து நிலவி வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், சுமார் 5 லட்சம் பாலஸ்தீனர்களுக்கான உதவிகளைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளதாகச் சர்வதேசச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக நிதிப் பற்றாக்குறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காசாவில் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், உணவு உதவிகள் குறைக்கப்படுவது அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கக்கூடும் என்ற…

காசாவில் 5 லட்சம் பேருக்கான உணவு உதவி குறைப்பு! நிதி நெருக்கடியில் உலக உணவுத் திட்டம்!