Skip to content
SS News
Breaking

இந்தியா

National news, policy and the stories shaping the country.

பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ள அபாயம் – அசாம், மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை!

பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ள அபாயம் – அசாம், மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை!

பூடான் நாட்டில் உள்ள ஷிண்டாபு (Shintaphu) பனிப்பாறை ஏரி உடைந்து அதிகளவிலான தண்ணீர் வெளியேறியுள்ளதால், இந்தியாவின் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூடானின் காசா மாவட்டத்தில் உள்ள இந்த ஏரியில் ஏற்பட்ட உடைப்பால் சுமார் 74 லட்சம் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நீர் மோ சூ (Mo Chhu) ஆறு வழியாக சங்கோஷ் ஆற்றை நோக்கிப் பாய்கிறது. இதனால் ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயரக்கூடும்…

More from இந்தியா

விவசாயிகளுக்கு ரூ.19,000 கோடி நிதி! குஜராத்தில் ரூ.14,000 கோடி திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 30) குஜராத்தின் பனஸ்கந்தா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தின் 24-வது தவணை நிதியை வெளியிட்டார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 9.34 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.18,690 கோடிக்கும் அதிகமான நிதி நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் செலுத்தப்படுகிறது. மேலும், குஜராத்தில் ரூ.14,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, சில திட்டங்களையும் நாட்டுக்கு…

விவசாயிகளுக்கு ரூ.19,000 கோடி நிதி! குஜராத்தில் ரூ.14,000 கோடி திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

ஆந்திராவில் புயலால் ரூ.500 கோடி மின் கட்டமைப்பு சேதம்! சீரமைப்புப் பணியில் 1,700 ஊழியர்கள்!

ஆந்திரப் பிரதேசத்தில் கரையைக் கடந்த ‘அர்னாப்’ புயலால் மாநிலத்தின் மின்சாரக் கட்டமைப்புக்கு சுமார் ரூ.500 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில மின்துறை அமைச்சர் கொட்டிபட்டி ரவி குமார் தெரிவித்துள்ளார். அக்டோபர் 29ஆம் தேதி மேற்கு கோதாவரி மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த அவர், மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துப் பேசினார். குறிப்பாக, மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 3,700 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாகத் தெரிவித்தார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தை மீண்டும் வழங்குவதற்காக…

ஆந்திராவில் புயலால் ரூ.500 கோடி மின் கட்டமைப்பு சேதம்! சீரமைப்புப் பணியில் 1,700 ஊழியர்கள்!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆந்திராவில் 3,100 கர்ப்பிணிகள் மருத்துவமனைகளுக்கு மாற்றம்!

ஆந்திரப் பிரதேசத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,100 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பாக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 367 பெண்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அக்டோபர் 29ஆம் தேதி வெளியிடப்பட்ட சுகாதாரத் துறை அறிக்கையின்படி, பிரசவத்துக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இருந்தவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிகள் என மொத்தம் 4,228 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 3,100 பேர் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். இவர்களில் 690 பேர் ஆரம்ப…

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆந்திராவில் 3,100 கர்ப்பிணிகள் மருத்துவமனைகளுக்கு மாற்றம்!

நொய்டாவில் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.35 கோடி மாயம்! 30 வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புத் தொகைகளில் இருந்து சுமார் ரூ.35 கோடி மாயமானதாகப் புகார் எழுந்துள்ளது. ஜேவர் சர்வதேச விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையும் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குகளைச் சரிபார்த்தபோது, பல லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடிக்கும் அதிகமான தொகை வரை காணாமல் போனது தெரியவந்ததாகப் புகார் தெரிவித்துள்ளனர்….

நொய்டாவில் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.35 கோடி மாயம்! 30 வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

அறிவியல் ஆராய்ச்சிக்கு ரூ.24,000 கோடி முதலீடு! காப்புரிமை பதிவுகளும் அதிகரிப்பு – பிரதமர் மோடி

புதுடெல்லியில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாடு (ESTIC 2026) நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி, உள்நாட்டுத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் கடந்த ஓராண்டில் மத்திய அரசின் ரூ.12,000 கோடி முதலீட்டுக்கு இணையாகத் தனியார் துறையும் ரூ.12,000 கோடி முதலீடு செய்துள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். இதன் மூலம்…

அறிவியல் ஆராய்ச்சிக்கு ரூ.24,000 கோடி முதலீடு! காப்புரிமை பதிவுகளும் அதிகரிப்பு – பிரதமர் மோடி

ஆந்திராவில் கரையைக் கடந்த அர்னாப் புயல்! 89,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல், அக்டோபர் 28 அதிகாலை ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடலோரப் பகுதிகளுக்கு அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதாகவும், காற்றின் வேகம் மணிக்கு 150 கி.மீ. வரை அதிகரித்ததாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் தாக்கத்தால் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ததுடன், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்துப் பாதிப்புகள்…

ஆந்திராவில் கரையைக் கடந்த அர்னாப் புயல்! 89,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

ஆந்திராவில் கரையைக் கடந்த ‘அர்னாப்’ புயல்! விமானச் சேவைகள் ரத்து!

வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல், ஆந்திரப் பிரதேச கடற்கரையில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளதால் அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவலின்படி, புயல் மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடிய மிகத் தீவிரப் புயலாகக் கரையைக் கடந்து வருகிறது. காற்றின் வேகம் மணிக்கு 150 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புயலை முன்னிட்டு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள்…

ஆந்திராவில் கரையைக் கடந்த ‘அர்னாப்’ புயல்! விமானச் சேவைகள் ரத்து!

சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனிக்கு அனுப்பும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை!

தமிழகக் கோயில்களில் பழமையான சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்ற பழங்காலப் பொருட்கள் விற்பனையாளரான சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனிக்கு அனுப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அமெரிக்கக் குடியுரிமை கொண்ட சுபாஷ் சந்திர கபூர், கடந்த 2012ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் உள்ள கோயிலில் இருந்து 19 பழமையான சிலைகள் திருடப்பட்ட வழக்கில், 2022ஆம் ஆண்டு அவருக்கு 10 ஆண்டுகள்…

சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனிக்கு அனுப்பும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை!

இந்திய ராணுவத்தின் AI திறனை மேம்படுத்த சர்வம் நிறுவனத்துடன் 5 ஆண்டு ஒப்பந்தம்!

இந்தியாவின் முப்படைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியகம் (Integrated Defence Staff) மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த சர்வம் (Sarvam) AI நிறுவனம் இடையே ஐந்து ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளிலும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பாதுகாப்புத் துறைக்கான AI பயன்பாடுகளை உருவாக்குதல், ஆராய்ச்சி, தகவல் மேலாண்மை,…

இந்திய ராணுவத்தின் AI திறனை மேம்படுத்த சர்வம் நிறுவனத்துடன் 5 ஆண்டு ஒப்பந்தம்!

வந்தே மாதரம் பாடல் கட்டாயத்திற்கு எதிரான மனுக்கள் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராகப் புதிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாகப் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. வந்தே மாதரம் பாடலைப் பாடுவதைக் கட்டாயமாக்கும் நடவடிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில், அதன் சட்டப்பூர்வ அம்சங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாட்டை அறிய உச்சநீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்யும் பதில் மற்றும் அடுத்தகட்ட விசாரணைக்குப் பிறகே…

வந்தே மாதரம் பாடல் கட்டாயத்திற்கு எதிரான மனுக்கள் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

சபரிமலையில் தினமும் 80,000 பக்தர்களுக்கு அனுமதி!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல–மகரவிளக்கு கால தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு வரும் அக்டோபர் 29ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பைத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான மண்டல–மகரவிளக்கு யாத்திரைக் காலம் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பக்தர்கள் தரிசனத்திற்கான நேரத்தை முன்கூட்டியே இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதற்காக www.sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும். நிலக்கல்–பம்பை வழியாக தினமும் 60,000 பக்தர்களுக்கும், எருமேலி…

சபரிமலையில் தினமும் 80,000 பக்தர்களுக்கு அனுமதி!

தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான நடைமுறை அவசியம் – தேர்தல் ஆணையம்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவுக்கு எதிராக, இந்தியத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்குவதற்கு, உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் தனிப்பட்ட முறையில் முடிவுகளை எடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, அவரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரியும்,…

தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான நடைமுறை அவசியம் – தேர்தல் ஆணையம்!

வாரணாசியில் இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி – நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி!

இந்திய விமானப்படையின் 94-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டார். அக்டோபர் 25-ஆம் தேதி நமோ காட் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ‘Wings Over Ganges’ எனப் பெயரிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்திய விமானப்படையின் திறன்…

வாரணாசியில் இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி – நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி!

ஒடிசாவில் 7,268 அரசு வேலைவாய்ப்புகள் – 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

ஒடிசா மாநிலத்தில் காவல்துறை மற்றும் சீருடைப் பணிகளில் மொத்தம் 7,268 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒடிசா சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (OUSSSC) சார்பில், 2026ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சீருடைப் பணிகள் தேர்வின் கீழ் இந்தப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டப்படிப்பு முடிக்காதவர்களும் தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப சில பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பில் காவலர் (சிவில்), காவலர் (தகவல் தொடர்பு), ஒடிசா இந்திய ரிசர்வ் பட்டாலியன் காவலர், தீயணைப்பு வீரர்,…

ஒடிசாவில் 7,268 அரசு வேலைவாய்ப்புகள் – 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

கச்சா எண்ணெய் விலை உயர்வு – இந்திய ரூபாயின் மதிப்பில் தாக்கம் ஏற்படுமா?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் அரசு பத்திரச் சந்தைகளில் இந்த விலை உயர்வு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படுகிறது. இதனுடன், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் தொடர்பான முடிவுகளும் சர்வதேச நிதிச் சந்தைகளின் போக்கைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி…

கச்சா எண்ணெய் விலை உயர்வு – இந்திய ரூபாயின் மதிப்பில் தாக்கம் ஏற்படுமா?

உள்ளூர் கைவினைப் பொருட்களை வாங்குங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் உள்ளூர் தொழில்கள் வளர்ச்சியடைவதுடன், கைவினைஞர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆடைகள், மண் பாண்டங்கள், மர வேலைப்பாடுகள் மற்றும் கைவினைக் கலைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளைச் சிறு தொழில்முனைவோரும் உள்ளூர் கலைஞர்களும்…

உள்ளூர் கைவினைப் பொருட்களை வாங்குங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

நாளை உத்தரபிரதேசம், ஒடிசா செல்லும் பிரதமர் மோடி! என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்?

பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 25) உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின்போது புதிய தொழிற்சாலை திறப்பு, விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளைப் பார்வையிடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். மேலும், ரிசர்வ் வங்கியின் புதிய டேட்டா சென்டர் மற்றும் சைபர் பாதுகாப்புப் பயிற்சி மையத்தையும் திறந்து வைக்க உள்ளார். உத்தரபிரதேசத்தில் நிகழ்ச்சிகள் முதலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்குச் செல்லும் பிரதமர் மோடி, காலை 11 மணியளவில் அர்விந்த் நிறுவனத்தின்…

நாளை உத்தரபிரதேசம், ஒடிசா செல்லும் பிரதமர் மோடி! என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்?

வீரமும் தியாகமும் நாட்டுக்கு பெருமை! ITBP படையினரைப் பாராட்டிய பிரதமர் மோடி

இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு, அப்படையில் பணியாற்றும் வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வீரர்களின் துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவை நாட்டிற்கு மிகப்பெரிய ஊக்கமாக இருப்பதாக அவர் பாராட்டியுள்ளார். ஒவ்வொரு சவாலையும் உறுதியுடன் எதிர்கொண்டு, நாட்டின் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றி வரும் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினரின் சேவை பாராட்டுக்குரியது என்று மோடி தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். வீரர்களின் தியாகங்கள் தேசத்திற்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாகவும் அவர்…

வீரமும் தியாகமும் நாட்டுக்கு பெருமை! ITBP படையினரைப் பாராட்டிய பிரதமர் மோடி

இந்தியாவின் எஃகு உற்பத்தி 8.51 கோடி டன்னை எட்டியது!

இந்தியாவின் கச்சா எஃகு உற்பத்தி 2026–27 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 85.1 மில்லியன் டன்னாகப் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே காலகட்டத்தில் முடிக்கப்பட்ட எஃகின் நுகர்வு 85 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. நாட்டின் தொழில்துறை செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியைப் புரிந்துகொள்ள இந்தப் புள்ளிவிவரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் எஃகுத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. சாலை அமைத்தல், பாலங்கள் கட்டுதல், ரயில்வே திட்டங்கள், குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு…

இந்தியாவின் எஃகு உற்பத்தி 8.51 கோடி டன்னை எட்டியது!