
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.12,000 கல்வி உதவித்தொகை! நவம்பர் 3 கடைசி நாள்!
தமிழகத்தில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத்தின் (NMMS) தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 2026–2027 கல்வியாண்டுக்கான இந்தத் தேர்வு டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 3ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில்வதை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதிபெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு…









