
அமெரிக்கா, சிங்கப்பூருக்கு பறக்கும் திருச்சி தீபாவளி பலகாரங்கள் – ஏற்றுமதி 30% அதிகரிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தயாரிக்கப்படும் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பலகாரங்களின் ஏற்றுமதி 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் சீஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு திருச்சியில் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பாரம்பரிய இனிப்புகள் மற்றும்…





