
கனவு காணுங்கள் என்றவர் இன்று நம்முடன் இல்லை… ஆனால் கனவுகள் வாழ்கின்றன!
இந்திய இளைஞர்களின் மனதில் நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் விதைத்தவர், கனவு காண்பதன் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தியவர், எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், அவரது வாழ்க்கைப் பயணத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்வது அவசியமாகிறது. ராமேஸ்வரத்தில் தொடங்கிய வாழ்க்கைப் பயணம்! 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் பிறந்தவர் அப்துல் கலாம். எளிய குடும்பத்தில் பிறந்த அவர், சிறுவயதிலேயே கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கடினமாக உழைத்தார். குடும்பத்தின் பொருளாதாரச்…




