
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் – குருபூஜை: தலைவர்கள் மரியாதை!
அரசியல் தலைவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரரான முத்துராமலிங்கத் தேவர், தனது பேச்சாற்றல் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்றையும் விடுதலை உணர்வையும் வளர்த்தவர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகளைப் பரப்பியதுடன், இந்திய தேசிய ராணுவத்திற்கும் ஆதரவு திரட்டினார். தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கருதி வாழ்ந்த தேவரின் நாட்டுப்பற்று, தியாகம் மற்றும் சமூகப் பணிகள் இன்றளவும் நினைவுகூரப்படுகின்றன. சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தையும்…



















