“வெற்றி தீபாவளி பரிசு” – தமிழக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!
Sakthibhavaniselvaraj
· 1 min read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், நடிகர் விஜய்யின் படங்கள் வெளியாகும்போது டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதை ஒப்பிட்டு, தீபாவளி நேரத்தில் இனிப்புகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பண்டிகைக் காலங்களில் வியாபாரிகள் மக்களுக்கு சலுகைகளை வழங்கி விற்பனையை அதிகரிக்க முயற்சிப்பார்கள் என்றும், ஆனால் தற்போதைய அரசு சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போலச் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
தனது விமர்சனத்தை “வெற்றி தீபாவளி பரிசு” எனக் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.













