தமிழக வனவிலங்கு வாரியம் மறுசீரமைப்பு – 3 எம்.எல்.ஏ.க்கள், சுற்றுச்சூழல் நிபுணர்கள் நியமனம்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

தமிழகத்தில் வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் வனப்பகுதி மேலாண்மையை மேம்படுத்தும் வகையில், மாநில வனவிலங்கு வாரியத்தை தமிழக அரசு மறுசீரமைத்துள்ளது. இதில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அரசாணையை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அக்டோபர் 28ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வாரியத்தின் தலைவராகவும், வனத்துறை அமைச்சர் துணைத் தலைவராகவும் செயல்படுவார்கள்.
வாரியத்தில் சட்டமன்ற உறுப்பினர்களான மு. சுதாகர் (காட்பாடி), சு. கார்த்திகேயன் (மதுரை கிழக்கு), எம்.ஆர். பல்லவி (திரு.வி.க. நகர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், வனவிலங்கு அறக்கட்டளை, இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் நிபுணர்களுக்கும் இந்த வாரியத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் மேலாண்மை, யானை மற்றும் புலிகளின் வாழ்விடப் பாதுகாப்பு, மனிதர் – வனவிலங்கு மோதலைக் குறைத்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அரசுக்கு இந்த வாரியம் ஆலோசனைகளை வழங்கும்.
புதிய உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




