224 திரைப்படங்களுக்கு ரூ.15.68 கோடி மானியம் – முதல்வர் விஜய் உத்தரவால் தயாரிப்பாளர்களுக்கு நிவாரணம்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

தமிழகத் திரைப்படத் துறையை ஊக்குவிக்கும் வகையில், 224 தமிழ்த் திரைப்படங்களுக்கான நிலுவையில் இருந்த ரூ.15.68 கோடி அரசு மானியத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2015 முதல் 2022ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்டு, அரசு மானியத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 224 திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது. தகுதி பெற்ற ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தலா ரூ.7 லட்சம் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்ற விழாவில், அமைச்சர் ராஜ்மோகன் 224 தயாரிப்பாளர்களுக்கும் மானியத்திற்கான காசோலைகளை வழங்கினார். ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன் தலைமையிலான தேர்வுக் குழு, 2015 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில் தலா 28 திரைப்படங்களைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரைத்தது.
குறைந்த முதலீட்டில் நல்ல கருத்துகளையும் சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் திரைப்படங்களைத் தயாரிப்பவர்களை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மானியத் தொகை தற்போது வழங்கப்பட்டிருப்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது




