வரலாறு காணாத IPO.. ஒரே நாளில் 13% சரிந்த Anthropic பங்குகள்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

AI நிறுவனமான Anthropic பங்குச்சந்தையில் அறிமுகமான அடுத்த நாளே அதன் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. இதனால் IPO-வில் முதலீடு செய்த சில்லறை முதலீட்டாளர்கள் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
Claude AI-ஐ உருவாக்கிய Anthropic நிறுவனம், IPO-வில் ஒரு பங்கை 83 டாலருக்கு விற்பனை செய்தது. முதல் நாள் வர்த்தகத்தில் பங்கு விலை 112 டாலர் வரை உயர்ந்து, பின்னர் 97 டாலரில் முடிவடைந்தது. ஆனால் அடுத்த நாள் வர்த்தகத்தில் சுமார் 13% சரிந்து 85 டாலர் வரை சென்றது.
முதல் நாள் மட்டும் சில்லறை முதலீட்டாளர்கள் 750 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பிலான Anthropic பங்குகளை வாங்கி விற்பனை செய்துள்ளனர். இது IPO அறிமுக நாளில் பதிவான மிக அதிகமான வர்த்தக அளவுகளில் ஒன்றாகும்.
AI நிறுவனங்களின் அதிகப்படியான முதலீடு, லாபம் ஈட்டுவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் சந்தை மதிப்பீடுகள் குறித்த கவலைகளே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.








