குழந்தைகள் தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் தமிழக அரசு!
Sakthibhavaniselvaraj
· 1 min read

நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ஆம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பள்ளிகளில் மாணவர்களுக்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பள்ளி மாணவர்கள் குழந்தைகள் தினத்தை உற்சாகமாகக் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.




