தங்கம் விலையில் திடீர் மாற்றம்… கிராமுக்கு ரூ.200, சவரனுக்கு ரூ.1,600 குறைவு!
Sakthibhavaniselvaraj
· 1 min read

சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,02,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.200 குறைந்து ரூ.12,815-க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து காணப்பட்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலை மாற்றம், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதாரச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த விலை சரிவு நகை வாங்குவோருக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.




