ரூ.148.91 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு!
Sa
Sakthibhavaniselvaraj
· 1 min read

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஆறு மாதங்களில் ஆக்கிரமிப்பில் இருந்த 163.40 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.148.91 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், அவற்றைக் கண்டறிந்து மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தற்போது மீட்கப்பட்டுள்ள நிலங்கள் மீண்டும் கோவில்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுதொடர்பான தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.




