ரசிகர்களைக் கவர்ந்த அஜித் – ஷாலினி ஜோடி… தீபாவளி புகைப்படம் வெளியீடு!
Sakthibhavaniselvaraj
· 1 min read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகை ஷாலினி தனது கணவரும் நடிகருமான அஜித்குமாருடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது அஜித் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரபலமான நட்சத்திரத் தம்பதிகளான அஜித் – ஷாலினி ஜோடி, தங்களது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான புகைப்படங்களை அவ்வப்போது மட்டுமே சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் இவர்கள் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில், தீபாவளி கொண்டாட்டத்தின் போது அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷாலினி தற்போது பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் கருத்துகளாகப் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.




