இரவில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்.. சங்கராபுரத்தில் அதிர்ச்சி!
Sakthibhavaniselvaraj
· 1 min read

சங்கராபுரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய், இரண்டு குழந்தைகளைப் பாம்பு கடித்தது: இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு; தாய் மருத்துவமனையில் அனுமதி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் ஏரிக்கரையோரம் வசித்து வந்த சந்திரன் மனைவி புஷ்பா, தனது நான்கு வயது மகள் தேவதர்ஷினி, இரண்டு வயது மகள் தேவஜனனி ஆகிய இரு குழந்தைகளுடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது மூவரையும் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து புஷ்பா கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மூவரையும் அருகிலுள்ள புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
அங்கு மூவரையும் சிகிச்சை அளித்தனர் அப்போது
இரண்டு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது
மேலும், தாய் புஷ்பாவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் :












