ஒரு ரூபாயில் இவ்வளவு சந்தோஷமா? 90ஸ் கிட்ஸ் நினைவுகள்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

ஒரு காலத்தில் பள்ளிக்கூடம் முடிந்ததும் நண்பர்களுடன் கடைக்குச் சென்று வாங்கிய சாக்லேட்டுகளுக்கு இன்றும் தனி இடம் உண்டு. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் குழந்தைப் பருவத்தில் முக்கியமான நினைவுகளாக இருந்தவை அந்தக் காலத்து சாக்லேட்டுகள்தான்.

இன்றைய குழந்தைகளுக்கு விதவிதமான சாக்லேட்டுகள் கிடைத்தாலும், 90ஸ் கிட்ஸ்களின் குழந்தைப் பருவத்தில் இடம்பிடித்த சில சாக்லேட்டுகளுக்கும் மிட்டாய்களுக்கும் எப்போதுமே தனி ரசிகர்கள் உண்டு. அன்றைக்கு கடைக்குச் சென்று ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிய அந்தச் சின்னச் சின்ன தின்பண்டங்கள் கொடுத்த சந்தோஷமே தனி!
அதில் முதலில் நினைவுக்கு வருவது மெலடி சாக்லேட். அதன் உள்ளே இருந்த கேரமல் சுவையும், ‘Melody itna chocolaty kyun hai?’ என்ற விளம்பரமும் இன்றும் பலருக்கு நினைவிருக்கும். அடுத்ததாக வண்ண வண்ண நிறங்களில் வந்த ஜெம்ஸ் சாக்லேட், நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிடுவதற்கும் விளையாடுவதற்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.

அதேபோல், சாப்பிடுவதற்கு முன்பே வாயில் வைத்து விளையாடிய பாண்டம் ஸ்வீட், வாயில் போட்டதும் பலூன் ஊத உதவிய பிக் பபுள், கிஸ்மி டூஃபி, பான் பசந்த் போன்ற மிட்டாய்களும் 90ஸ் கிட்ஸ்களின் விருப்பப்பட்டியலில் முக்கிய இடம் பிடித்தவை.
பள்ளிக்குச் செல்லும்போது அம்மாவிடம் வாங்கும் காசைச் சேமித்து வைத்து மாலை நேரத்தில் கடையில் பிடித்த மிட்டாயை வாங்குவது, நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிடுவது, யாரிடம் அதிகம் இருக்கிறது என்று போட்டி போடுவது என ஒவ்வொன்றும் ஒரு தனி அனுபவம்.
இப்போது எத்தனையோ புதிய சாக்லேட்டுகள் வந்தாலும், அந்தக் காலத்து மிட்டாய்கள் கொடுத்த மகிழ்ச்சியை மறக்க முடியாது. உண்மையில் அவை வெ













