சைபர் குற்றம், போ*ப்பொருள், தீவிரவாதம்.. MAC கண்காணிப்பு விரிவாக்கம்! அமித் ஷா அறிவிப்பு
Sakthibhavaniselvaraj
· 1 min read

நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், மத்திய உளவுத்துறையின் கீழ் செயல்படும் Multi-Agency Centre (MAC) கண்காணிப்பு வரம்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு, போ*ப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகள் மற்றும் புதிதாக உருவாகும் தீவிரவாத சிந்தனை பரவும் பகுதிகள் ஆகியவை இனி MAC கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் பேசிய அமித் ஷா, MAC செயல்பாடுகள் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கார்கில் போருக்குப் பிறகு 2001-ல் உருவாக்கப்பட்ட MAC, 2009-ல் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. 2025-ல் இதன் பாதுகாப்பான தகவல் தொடர்பு வலையமைப்பு மேம்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் உள்ள காவல் மாவட்டங்களை இணைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.
மேலும், தேசிய அளவில் தகவல்களை ஒருங்கிணைக்கும் National Memory Bank உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதச் செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு மாநிலத்தின் பயங்கரவாத தடுப்புப் பிரிவிலும் சைபர் நிபுணர் குழுக்களை வலுப்படுத்த வேண்டும் என்றும், பயங்கரவாத வலையமைப்புகளை முழுமையாக ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.




