52 மணி நேர கேமிங் மராத்தான்.. GTA 6 முடிவில் கண்ணீர் விட்ட iShowSpeed!
Sakthibhavaniselvaraj
· 1 min read

பிரபல யூடியூபர் iShowSpeed, GTA 6 விளையாட்டை தொடர்ந்து 52 மணி நேரத்திற்கும் மேலாக விளையாடி முடித்துள்ளார். தூங்காமல் நடைபெற்ற இந்த கேமிங் மராத்தானின் இறுதியில், விளையாட்டின் முடிவைக் கண்டு அவர் கண்ணீர் விட்டு அழுதது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த iShowSpeed, GTA 6 வெளியானதைத் தொடர்ந்து தனது யூடியூப் நேரலையில் விளையாடத் தொடங்கினார். ஆரம்பத்தில் சில மணி நேரங்கள் மட்டுமே விளையாடத் திட்டமிட்டிருந்த அவர், ரசிகர்களின் ஆர்வத்தால் தொடர்ந்து விளையாடி, சுமார் 52 மணி நேரம் 30 நிமிடங்களில் கதையை நிறைவு செய்தார்.

விளையாட்டின் இறுதியில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் உயிரிழக்கும் முடிவைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இத்தனை மணி நேரம் விளையாடியதற்கு இப்படியொரு முடிவு கிடைத்துவிட்டதே என வருத்தத்துடன் கண்ணீர் விட்டார். அவரது இந்த எதிர்வினை ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்ந்து தூங்காமல் விளையாடியதால் ஏற்பட்ட சோர்வில், விளையாட்டின் சேவ் ஃபைலையும் தவறுதலாக இழந்ததாகக் கூறப்படுகிறது. அவரது 52 மணி நேர நேரலை தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.













