சென்னையில் ரூ.700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

சென்னையில் ஐஸ்கிரீம் வாகனத்தில் கடத்தப்பட்ட 71.24 கிலோ ஹெராயின் போ*ப்பொருளை வருவாய் புலனாய்வுத் துறை (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை மாதவரம் பகுதியில் அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொண்டனர். அப்போது ஐஸ்கிரீம் வாகனத்தையும் அதற்கு பாதுகாப்பாக வந்த இருசக்கர வாகனத்தையும் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.
அந்த வாகனத்தில் ஐஸ்கிரீம் வைப்பதற்கான பெட்டிகள் மற்றும் ரேக்குகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 69 பொட்டலங்களில் 71.24 கிலோ ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போ*ப்பொருளின் மதிப்பு ரூ.700 கோடி வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக அதன் மதிப்பு வெளியிடப்படவில்லை.
இந்தக் கடத்தல் கும்பல் சென்னையை இடைநிலைப் பகுதியாகப் பயன்படுத்தி, திருச்சி வழியாக கடல் மார்க்கத்தில் இலங்கைக்கு போ*ப்பொருளைக் கடத்தத் திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் போ*ப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கடத்தலின் பின்னணியில் உள்ள சர்வதேச வலையமைப்பு குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












