சர்க்கரை இருப்பு வைத்திருக்கும் காலம் 30 நாட்களில் இருந்து 15 நாட்களாக குறைப்பு!
Sakthibhavaniselvaraj
· 1 min read

சர்க்கரை பதுக்கலைத் தடுப்பதற்கும், சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாமல் சீரான விநியோகத்தை உறுதி செய்வதற்கும் சர்க்கரை வியாபாரிகள் இருப்பு வைத்திருக்கும் காலத்தை மத்திய அரசு 30 நாட்களில் இருந்து 15 நாட்களாகக் குறைத்துள்ளது.
இதன்படி, அக்டோபர் 15 முதல் நவம்பர் 30 வரை சர்க்கரை வியாபாரிகள் அதிகபட்சமாக 1,000 குவிண்டால் சர்க்கரையை மட்டுமே இருப்பு வைத்திருக்க முடியும். அதேபோல், சர்க்கரை பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு மேல் இருப்பு வைத்திருக்கவும் அனுமதி இல்லை.
கொல்கத்தா மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட பெருநகரப் பகுதிகள், அசாம் மாநிலத்திற்கு மட்டும் 2,000 குவிண்டால் வரை இருப்பு வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சர்க்கரை பதுக்கல், செயற்கையான விலை உயர்வு மற்றும் ஊக வணிகத்தைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைகளில் இருந்து வியாபாரிகள் வழியாக நுகர்வோருக்கு சர்க்கரை தடையின்றி சென்றடைவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த உத்தரவு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணை தமிழக அரசிதழிலும் நவம்பர் 13-ம் தேதி மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.












