தமிழக போக்குவரத்து மற்றும் கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – ரூ.216.81 கோடி ஒதுக்கீடு!
Sakthibhavaniselvaraj
· 1 min read

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2025-26ஆம் நிதியாண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை வழங்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்காக மொத்தம் ரூ.216.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மாநிலத்தில் உள்ள 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1,06,001 ஊழியர்களுக்கு ரூ.167.12 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் 44,573 ஊழியர்களுக்கு ரூ.49.69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. லாபம் ஈட்டும் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும். உபரி நிதி இல்லாத நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
மேலும், போனஸ் சட்டத்தின் வரம்புக்குள் வராத நஷ்டத்தில் இயங்கும் தலைமை மற்றும் மத்திய கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு தலா ரூ.3,000-மும், தொடக்கக் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு தலா ரூ.2,400-மும் கருணைத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 1,50,574 ஊழியர்கள் இந்த அறிவிப்பின் மூலம் பயனடைய உள்ளனர்.













