அசாமில் கின்னஸ் உலக சாதனை.. ஒரே இடத்தில் 15,000 கலைஞர்கள் இணைந்து நடனமாடி அசத்தல்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

அசாம் மாநிலத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து பாரம்பரிய நாட்டுப்புற நடனமாடி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.
அசாமின் கர்பி சமூகத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமான ‘நிம்சோ கெருங்’ நடனத்தைப் பிரபலப்படுத்தும் வகையில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 15,000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே இடத்தில் திரண்டு, பாரம்பரிய உடைகள் அணிந்து ஒரே நேரத்தில் நடனமாடினர்.
பாரம்பரிய இசையின் தாளத்திற்கு ஏற்ப ஆயிரக்கணக்கான கலைஞர்கள் ஒருங்கிணைந்து நடனமாடிய காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. கர்பி சமூகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கலை அடையாளத்தை உலக அளவில் எடுத்துச் செல்லும் முயற்சியாகவும் இந்த நிகழ்வு அமைந்தது.
இந்த பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து அசாம் மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளின் சிறப்பும் உலக அரங்கில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.




