AIBE தேர்வு 2026.. ஹால் டிக்கெட் இன்று வெளியீடு! விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Sakthibhavaniselvaraj
· 1 min read

இந்திய பார் கவுன்சில் நடத்தும் அகில இந்திய பார் தேர்வு (AIBE-22) 2026-க்கான ஹால் டிக்கெட் இன்று (நவம்பர் 14) வெளியிடப்பட உள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தகுதியான தேர்வர்கள், இந்திய பார் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான allindiabarexamination.com மூலம் தங்களது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண் மற்றும் உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்த வேண்டும். ஹால் டிக்கெட்டில் தேர்வு மையம், தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வரின் தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்தவுடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், புகைப்படம், பதிவு விவரங்கள் மற்றும் தேர்வு மையம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் சரிபார்க்க வேண்டும். ஏதேனும் தவறுகள் இருந்தால் இந்திய பார் கவுன்சிலின் தேர்வுக் கட்டுப்பாட்டுப் பிரிவைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
AIBE-22 தேர்வு வரும் நவம்பர் 29ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் ஆஃப்லைன் முறையில் நடைபெற உள்ளது. தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுடன் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வு மையத்திற்குள் அனுமதி வழங்கப்படாது என்பதால், தேர்வர்கள் முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து அச்சிட்டு வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.











