கரையை கடக்க தொடங்கிய அக்வான் புயல்.. வலுவிழந்து வரும் நிலையில் அடுத்த 2 மணி நேரம் முக்கியம்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் தற்போது வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நெருங்கியுள்ளது. இன்று காலை முதல் புயல் கரையை கடக்கும் நிகழ்வு தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 21 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த அக்வான் புயல், ஒடிசாவின் கோபால்பூர் அருகே கரையை கடந்து வருகிறது. கரையை கடக்கும் நிகழ்வு அடுத்த 2 மணி நேரத்தில் நிறைவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புயல் தீவிர புயல் நிலையிலிருந்து சாதாரண புயலாக வலுவிழந்துள்ளது. தொடர்ந்து நிலப்பரப்பை நெருங்குவதால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் வலுவிழக்க வாய்ப்புள்ளது.
புயலின் தாக்கத்தால் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா பகுதிகளில் கனமழை, பலத்த காற்று வீசக்கூடும். கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை அக்வான் புயல் சென்னையை விட்டு விலகிச் சென்றுள்ளதால் உடனடி மழை வாய்ப்பு குறைந்துள்ளது. இருப்பினும் நவம்பர் 23 மற்றும் 24-ம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












